Actor Ajith kumar Practice sessions: நடிகர் அஜித் குமார் தீவிர ரேஸிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Actor Ajith kumar Practice sessions: நடிகர் அஜித் குமார் தீவிர ரேஸிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Published on: October 10, 2025 at 5:03 pm
பார்சிலோனா (ஸ்பெயின்), அக்.10, 2025: தமிழ்நாட்டின் முன்னணி நடிகரும்- ரேஸருமான அஜித் குமார், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துவருகிறார்.
அண்மையில் ஸ்பெயினில் நடந்த போட்டியில் இவரது ரேஸிங் அணி 3வது பரிசை தட்டிச் சென்றது. இந்த நிலையில், அஜித் குமார் தற்போது தீவிர ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் தற்போது வைரலாகியுள்ளன. நடிகர் அஜித் குமார் காரில் சீறிப் பாயும் காட்சிகள் காண்போரை மயிர் கூசச் செய்கின்றன.
இந்தக் காட்சிகளை பலரும் விருப்பம் (லைக்) தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் ரேஸிங் பயிற்சி வீடியோ, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனியாவில் எடுக்கப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகை திரும்பி பார்க்க வைத்த காந்தாரா.. வசூல் நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com