Heavy rains in Telangana: தெலங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. இதற்கிடையில் சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Heavy rains in Telangana: தெலங்கானாவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. இதற்கிடையில் சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Published on: October 5, 2025 at 11:11 am
ஹைதராபாத், அக்.5, 2025: தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. தெலுங்கானா டுடே செய்தியின்படி, ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், பேகம்பேட்டை, செகந்திராபாத், தில்சுக்நகர், ஹயாத்நகர் மற்றும் மியாபூர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஹைதராபாத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம், “ஹைதராபாத்தில் திங்கள்கிழமை வரை பொதுவாக மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யும்” என்று கணித்துள்ளது.
#WATCH | Telangana: Waterlogging witnessed in parts of Hyderabad city following heavy rainfall. pic.twitter.com/gPuPk4fOqw
— ANI (@ANI) October 5, 2025
தொடர்ந்து, தெலுங்கானாவின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல், பலத்த மேற்பரப்பு காற்றுடன் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில், கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு தடை.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com