Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன.
Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன.
Published on: October 5, 2025 at 10:36 am
சென்னை, அக்.5, 2025: மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில், சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) என்ற அதிக நச்சு இரசாயனம் இருப்பது ஆய்வக சோதனைகள் மூலமாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மத்தியப் பிரதேச அரசு சனிக்கிழமை (அக்.4, 2025) கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பின் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்தது. இந்த நிலையில், குழந்தைகள் இறப்பு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மத்தியப் பிரதேச அரசு, அந்த மருந்தை தயாரிக்கும் மருந்து நிறுவனம் குறித்து விசாரிக்குமாறு தமிழக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தது.
வெள்ளிக்கிழமை (அக்.3, 2025) காலை மாநிலத்திற்கு விசாரணை அறிக்கை கிடைத்தது. இந்த நிலையில், அதே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிற தயாரிப்புகளுக்கும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடை செய்துள்ளன.
இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பு.. ம.பி.யில் Coldrif syrup இருமல் மருந்துக்கு தடை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com