புதுச்சேரி, அக்.3, 2025: “நாட்டின் அமைதியை கெடுக்கும் ஓர் இயக்கம்” ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தை என கடுமையாக விமர்சித்துள்ளார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி.
நாராயண சாமி பேட்டி
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்ஸின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றி இருவருக்கும் என்ன தெரியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
ஆங்கிலேயர்களை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்
தொடர்ந்து, “சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி மற்றும் நேரு தலைமையிலான போராட்டங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் தான் ஆங்கிலேயர்களை ஆதரித்தது” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் மீது விமர்சனம்
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சித்து பேசிய நாராயண சாமி, “ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு இயக்கம்; அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.
தொடர்ந்து, “முதல்வர் மற்றும் முதன்மை அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணியை அறியாமல் அவர்களை வாழ்த்துகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அஸ்ஸாமை உலுக்கும் பாடகர் ஜூபின் கார்க் மரணம்.. நீதி கோரி காங்கிரஸ் பேரணி
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
Bihar assembly election: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன….
New delhi: பிளிங்கிட் டெலிவரி பாய் ஒருவர் பெண்ணின் மார்பகத்தை தொட்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….
Sabarimala gold issue: சபரிமலை தங்க ஆபரணம் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது….
No ban on beef in Goa: கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மறுத்துள்ளார் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன்…
Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்