Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் ஏரி நீரில் மூழ்கிய விபத்தில் குறைந்தப்பட்சம் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் ஏரி நீரில் மூழ்கிய விபத்தில் குறைந்தப்பட்சம் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Published on: October 2, 2025 at 11:39 pm
போபால், அக்.2, 2025: மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் விஜயதசமி தினத்தில், துர்கா தேவியின் சிலைகளை கரைப்பதற்காக ஏற்றிச் சென்ற டிராக்டர் வியாழக்கிழமை (அக்.2, 2025) நீரில் மூழ்கியதில் குறைந்தது 10 பக்தர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பந்தனா பகுதியில் இந்த சோகம் நடந்ததாக காவல் துறை தலைவர் (இந்தூர் கிராமப்புற வரம்பு) அனுராக் தெரிவித்தார். அதாவது, பல்வேறு கிராமங்களில் கரைப்பதற்காக நிறுவப்பட்ட துர்கா சிலைகளை கரைத்த போத இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 10 பேரின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.. கொலம்பியாவில் இருந்து மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com