Gold Rate Today: 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாகி வருகிறது.
Gold Rate Today: 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாகி வருகிறது.
Published on: October 2, 2025 at 7:13 pm
சென்னை, அக்.2, 2025: சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.10,950 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.87,600 என விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த இரு தினங்களில் கிட்டத்தட்ட ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது.
24 காரட் தங்கம்
24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.11,945 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.95,560 ஆக காணப்படுகின்றது. கடந்த 7 தினங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது செப்.23ஆம் தேதி 1 கிராம் தங்கம் ரூ.11,607 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் ரூ.92,856 ஆக காணப்பட்டது.
இதையும் படிங்க: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை… இ.எம்.ஐ பாதிக்கப்படுமா?
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராம் ரூ.164 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ வெள்ளி ரூ.1,64,000 ஆக காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் வெள்ளி ரூ.14 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
செப்.23ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000 ஆக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கனரா வங்கியில் ரூ.1 லட்சம் FD முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com