S Ve Shekher: தமிழ்நாடு அரசு விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.
S Ve Shekher: தமிழ்நாடு அரசு விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.
Published on: October 1, 2025 at 5:40 pm
சென்னை, அக்.1, 2025: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் மீது தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது நடிகர் எஸ்.வி சேகர் கூறினார்.இது தொடர்பாக சென்னையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “விஜய் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஏனென்றால் விஜய் காவல்துறைக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை” என்றார்.
எஸ்.வி சேகர் பேட்டி
(நன்றி: ஏ.என்.ஐ)#WATCH | Chennai, Tamil Nadu: On action by the Tamil Nadu Govt in Karur stampede, actor and former MLA S. Ve. Shekher says, "Tamil Nadu Government will never take any action against Vijay. Because Vijay has not given any promise officially in writing to the Police or Government.… pic.twitter.com/NvoU5QxsK1
— ANI (@ANI) October 1, 2025
தொடர்ந்து, “எல்லாவற்றிலும் பொறுப்பு ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் அதிகாரிகள் கையெழுத்திட்டனர், பிறகு அரசு எப்படி பழிவாங்கும்? திமுகவுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியும்” என்றார்.பின்னர், விஜய்க்கு அப்புறம் அரசியல் என்னன்னு தெரியும்” என்றும் நடிகர் எஸ்.வி சேகர் கூறினார். முன்னதாக, “10 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் உள்பட எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் மரணம்
கரூரில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஏற்காட்டில் பதுங்கல்? த.வெ.க ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com