Anbumani Ramadoss: திருவண்ணாமலையில், இளம்பெண்ணை காவலர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anbumani Ramadoss: திருவண்ணாமலையில், இளம்பெண்ணை காவலர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 30, 2025 at 11:08 pm
சென்னை, செப்.30, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகில் தாய் கண் எதிரிலேயே இளம்பெண்ணை இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை எவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இன்னொரு வேதனையான எடுத்துக்காட்டு இது தான். சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு இந்த அளவுக்கு சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு இது தான் சான்று. காவலர்களின் கடமை பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது தான்.
ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களே சரக்குந்தில் சென்ற இரு பெண்களை மிரட்டி, இறக்கி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்றால் காவல்துறையும், சட்டம் – ஒழுங்கும் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் போலீசாரால் இளம்பெண் பாலியல் வன்புணர்வு.. எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 54% அதிகரித்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதைப் பற்றியெல்லாம் திமுக அரசு கவலைப்படாமல் இருந்ததன் விளைவு தான் இந்த கொடுமை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்திருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும். சட்டம் – ஒழுங்கு சீர்குலைவில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள ஒரே வழி திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிக்கப் போவது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகளை சரி செய்க.. மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com