TTV Dhinakaran: “ஓ. பன்னீர் செல்வம் தனது தவறை உணர்ந்தார்; ஆனால் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை” என பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி தினகரன் கூறினார்.
TTV Dhinakaran: “ஓ. பன்னீர் செல்வம் தனது தவறை உணர்ந்தார்; ஆனால் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை” என பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி தினகரன் கூறினார்.
Published on: September 27, 2025 at 3:54 pm
சென்னை, செப்.26, 2025: ஓ. பன்னீர் செல்வம் தனது தவறை உணர்ந்துவிட்டார்; ஆனால் எடப்பாடி பழனிசாமி இன்னமும் தனது தவறை உணராமல் இருக்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறினார்.
இது குறித்து டி.டி.வி தினகரன் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஓபிஎஸ் தனது தவறுகளை உணர்ந்தார், ஆனால் பழனிசாமி உணரவில்லை. நாங்கள் அவருக்கு துரோகம் இழைத்ததாக பழனிசாமி கூறுகிறார்” என்றார்.
டி.டி.வி தினகரன் பேட்டி
VIDEO | Chennai: “OPS realised his faults but Palaniswami did not. Palaniswami is claiming that we betrayed him. In 2017 February, we only supported him to become the CM. Our 18 MLAs supported him. But he removed me from party. My MLAs asked him and he said there is a pressure… pic.twitter.com/uBa3jiKTDt
— Press Trust of India (@PTI_News) September 27, 2025
(நன்றி: பி.டி.ஐ)
மேலும், “2017 பிப்ரவரியில், நாங்கள் அவரை முதலமைச்சராக ஆதரித்தோம். எங்கள் 18 எம்.எல்.ஏக்கள் அவரை ஆதரித்தனர். ஆனால் அவர் என்னை கட்சியிலிருந்து நீக்கினார். என் எம்.எல்.ஏக்கள் அவரிடம் இதுதொடர்பாக கேட்டார்கள்” எனக் கூறினார்.
தொடர்ந்து, “டெல்லியிலிருந்து அழுத்தம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். உண்மையில், அவர் அரசாங்கத்தை நடத்துவதற்காக, பொய் சொன்னார்.
அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க விரும்பவில்லை. அவர் மிகப்பெரிய பண பலத்தை கொண்டிருந்தார். நான் எப்படி அவரை கடத்த முடியும்? அவர் பொய் சொல்கிறார்” என்றார்.
இதையும் படிங்க : திராவிட மாடல் என்றாலே டிராமாதான்.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com