Petal gahlot: பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. வெட்கமில்லை” அவர்கள் பேச என இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Petal gahlot: பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. வெட்கமில்லை” அவர்கள் பேச என இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Published on: September 27, 2025 at 10:31 am
நியூயார்க், செப்.27, 2025: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதாகவும், உண்மைகளைத் திரிப்பதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியது.
ஷெபாஸ் ஷெரீப்பின் உரைக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் (UNGA) பதிலளிக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. இதற்கான பதிலலை இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெஹ்லோட் வெள்ளிக்கிழமை (செப்.26, 2025) அளித்தார்.
#BREAKING: Indian Diplomat Petal Gehlot at @UN slams Pakistan Prime Minister Shehbaz Sharif at the #UNGA80 for his absurd theatrics against India. Exposes Pak for sheltering terrorists including Osama Bin Laden. Dares Pak PM to act against terror. And refers to Pahalgam terror… pic.twitter.com/w2s8T1cYT0
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 27, 2025
அப்போது, “இந்தக் கூட்டத்தில் காலையில் பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நாடகங்கள் அரங்கேறின. அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தினார். அதுதான் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் மையப் புள்ளி. இருப்பினும், எந்த அளவிலான நாடகமோ, எந்த அளவிலான பொய்களோ உண்மைகளை மறைக்க முடியாது” என்றார்.
மேலும், 26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மே 7 அன்று தொடங்கப்பட்ட நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா குறிவைத்தது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, “பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. அவர்களுக்கு வெட்கமில்லை” எனப் பொருள்பட பேசினார்.
இதையும் படிங்க : இந்திய- கனடா உறவு.. ஜெய்சங்கரை சந்திக்கிறார் அனிதா ஆனந்த்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com