Nainar Nagendran: “UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு” என விமர்சித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Nainar Nagendran: “UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு” என விமர்சித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Published on: September 25, 2025 at 6:10 pm
சென்னை, செப்.25, 2025: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4.000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “கௌரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் 8,000 ஆக உயர்த்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. “பிச்சை புகினும் கற்கை நன்றே” எனக் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு போதித்த நமது தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் அரசு சிதைத்து விட்டது என்பதைத்தான் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “திமுக அரசின் அலட்சியத்தால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் பாழாக வேண்டுமா? அதிலும் UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு. மீண்டும் மீண்டும் அரசு கல்லூரிகளில் அவர்களைப் பணியமர்த்துவது ஏன்? இது மிகப்பெரும் உழைப்புச் சுரண்டலல்லவா?” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “படித்த பட்டதாரிகளையும் ஆட்டிப் படைக்கும் திமுக அரசின், அராஜக நிர்வாகத்திற்குக் கூடிய விரைவில் நாம் முடிவு கட்ட வேண்டும். இல்லையேல் எஞ்சியிருக்கும் பெருமைகளையும் இழந்து நமது தமிழகம் நிர்கதியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நிலம், வீட்டு மனை வழிகாட்டி மதிப்பு பெயரில் வழிப்பறி.. ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com