GK Mani: அன்புமணி ராமதாஸின் பதவி செல்லாது எனக் கூறியுள்ள பா.ம.க. கெளரவத் தலைவர் ஜி.கே மணி, கூட்டணி பேச்சு தொடர்பாக ராமதாஸூக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.
GK Mani: அன்புமணி ராமதாஸின் பதவி செல்லாது எனக் கூறியுள்ள பா.ம.க. கெளரவத் தலைவர் ஜி.கே மணி, கூட்டணி பேச்சு தொடர்பாக ராமதாஸூக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.
Published on: September 25, 2025 at 1:39 pm
சென்னை, செப்.25, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் உள்கட்சி பிரச்னை எழுந்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக பேச கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கு மட்டுமே அதிகாரம் என கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி புதன்கிழமை (செப்.24, 2025) செய்தியாளர்களிடம் பேசினார். இது குறித்து பேசிய அவர், “அன்புமணியின் பதவி செல்லாது என்பதில் உறுதியாக உள்ளோம்” என்றார். மேலும், “ராமதாஸ் தலைமைதான் உண்மையான பாமக என நேற்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம்” என்றார்.
தொடர்ந்து, “தேர்தல் ஆணையம் கூடுதல் தகவல் கேட்டதையடுத்து அதையும் கொடுத்துள்ளோம். கடந்த மே மாதம் 28ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. பதவி நீட்டிப்புக்காக அன்புமணி கொடுத்த ஆவணம் தவறானது என்பதை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.
கூட்டணிப் பேச்சு
இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசிய ஜி.கே. மணி, “கூட்டணி பேச்சு நடத்த ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம், தேர்தல் ஆணையம் நல்ல முடிவை அறிவிக்கும்” என்றார்.
இதையும் படிங்க : பீகாரில் பா.ம.க போட்டியா? ராமதாஸ் கலகல பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com