Yuvraj Singh: தனது மருமகள், “ஹேசல் கீச்” குறித்து முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங்கின் தந்தை அதிர்ச்சியூட்டும் கருத்தை தெரிவித்துள்ளார்.
Yuvraj Singh: தனது மருமகள், “ஹேசல் கீச்” குறித்து முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங்கின் தந்தை அதிர்ச்சியூட்டும் கருத்தை தெரிவித்துள்ளார்.
Published on: September 25, 2025 at 1:16 pm
சண்டிகர், செப்.25, 2025: முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான யோகராஜ் சிங், உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவார்.இவர், தனது மகனின் திருமணம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணாங்க் அட்ரேயின் யூடியூப் சேனலில் நடந்த ஒரு வெளிப்படையான உரையாடலில், யோகராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
அதாவது, யுவராஜிடம் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது இனத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று ஒருமுறை கேட்டதாக ஒப்புக்கொண்டார்.இந்தக் கருத்து இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், யுவராஜுக்கு 20 வயதில் திருமணம் செய்து வைக்க சமூகம் அடிக்கடி வற்புறுத்தியதை யோகராஜ் நினைவு கூர்ந்தார்.
தனது மகன் தனது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நம்பி, அந்த யோசனையை நான் கடுமையாக எதிர்த்தேன்.
அப்போது, “யுவராஜை 20 வயதில் திருமணம் செய்து வைக்க மக்கள் விரும்பினர். நான், அவர் ஏற்கனவே வயதாகிவிட்டாரா?’ என்று கேட்டேன். அவருக்கு 38 வயது ஆனபோது, இப்போது நீங்கள் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்” என்றேன் என்றார்.
யுவராஜ்-கீச் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள், மகன் ஓரியன் மற்றும் மகள் ஆரா ஆவார்கள்.
இதையும் படிங்க : 5 சிக்ஸர், 6 பவுண்டரி.. அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்.. 41 ரன்னில் இந்தியா வெற்றி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com