BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on: September 24, 2025 at 9:26 pm
Updated on: September 24, 2025 at 10:27 pm
சென்னை, செப்.24, 2025: தமிழ்நாட்டை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை (5 ஜூலை 2024) வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை (செப்.24, 2025) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை; முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடைபெறவில்லை” எனக் மனுதாரர் தரப்பினர் குற்றஞ்சாட்டினார்கள்.
இதற்கு போலீஸ் தரப்பில், “இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “ரவுடி நாகேந்திரன்- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பு, ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் குறித்தம் உரிய விசாரணை இல்லை என மனுதாரர்கள் தரப்பு வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன் இன்று (செப்.24, 2025) வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : சீமான் vs விஜயலட்சுமி.. மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com