Kerala: கேரள பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kerala: கேரள பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 23, 2025 at 1:14 pm
திருவனந்தபுரம், செப்.23, 2025: திருவனந்தபுரம் மாநகராட்சியின் திருமலை வார்டின் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் செப்டம்பர் 20 ஆம் தேதி தனது வார்டு கவுன்சில் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க இடையே வார்த்தை மோதலை தூண்டியுள்ளது.
இதற்கிடையில், அனில் குமார் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனில் குமாருக்கு பாரதிய ஜனதா கட்சி உதவி இருக்க வேண்டும். கட்சியின் தலைமையிடமோ நிர்வாகிகளோ உதவாத காரணத்தில்தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட்தான் காரணம்
இந்த நிலையில் பா.ஜ.க. கவுன்சிலர் அனில் குமார் மரணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த அழுத்தம்தான் காரணம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. மேலும் அவர் நம் மக்கள் என கூட்டுறவுச் சங்கம் குறித்து பேசியுள்ளார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை அரசியல் ரீதியாக எடுத்துச் செல்ல நினைக்கின்றனர்” என பா.ஜ.க தலைவர் வி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜெய்ப்பூர்-மும்பை ரயில் துப்பாக்கிச் சூடு.. தாடி வைத்த நபரை சுட்ட போலீஸ்.. சாட்சி பரபரப்பு வாக்குமூலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com