Kamal Hassan: கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது என நடிகர் கமல்ஹாசன் எம்.பி கூறினார்.
Kamal Hassan: கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது என நடிகர் கமல்ஹாசன் எம்.பி கூறினார்.
Published on: September 21, 2025 at 6:21 pm
சென்னை, செப்.21, 2025: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, கூடுகிற ஓட்டம் ஓட்டாக மாறாது. இது இந்தியாவில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்றார்.
தொடர்ந்து, விஜய்யை பற்றி சொல்கிறீர்களா? என்ற கேள்விக்கு விஜய் மட்டுமல்ல எனக்கும் பொருந்தும்” என்றார்.திருவாரூர், நாகப்பட்டினம் பரப்புரைநடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திமுக மற்றும் பா.ஜ.க.வை விமர்சித்து பேசினார்.மேலும் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் திமுக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை என்றும் அந்த ஊரை கருவாடாக ஆக்கிவிட்டது என்றும் கூறினார்.
மேலும், மு.க. ஸ்டாலினின் வெளிநாடு முதலீடு குறித்து பேசிய விஜய், வெளிநாடு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா எனக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :விஜய் பேச்சில் குறைந்தப்பட்ச மாண்பு இல்லை.. சசிகாந்த் எம்.பி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com