Public Provident Fund -PPF) | பி.பி.எஃப் திட்டத்தில் மாதம் ரூ.12,500 செலுத்தி ரூ.1 கோடி குவிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Public Provident Fund -PPF) | பி.பி.எஃப் திட்டத்தில் மாதம் ரூ.12,500 செலுத்தி ரூ.1 கோடி குவிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: September 6, 2024 at 8:59 pm
Public Provident Fund -PPF | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்ட கால சேமிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது.
பி.பி.எஃப் (PPF) அதனுடன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருகிறது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் உத்தரவாதமான வருமானத்துடன் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டை உறுதிப்படுத்த முடியும்.
அந்த வகையில், 15 வருட முதிர்வு காலத்துடன் கூடிய பி.பி.எஃப் (PPF), காலப்போக்கில் முதலீடு சீராக வளர உதவுகிறது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் (பழைய வரி முறை) பிரிவு 80C இன் கீழ், பி.பி.எஃப் முதலீட்டாளர்கள் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பலன்களைப் பெறலாம்.
ரூ.1 கோடி சேமிப்பது எப்படி?
பி.பி.எஃப் திட்டத்தில் ஆண்டுக்கு தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாதம் ரூ.12500 செலுத்தினால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் சேமிக்க முடியும்.
இது 15 ஆண்டுகளில் ரூ.22.5 லட்சமாக காணப்படும். வட்டி மூலம் ரூ.18,18,209 கிடைத்திருக்கும். ஆகவே ஒட்டுமொத்த மதிப்பு ரூ.40,68,209 ஆக காணப்படும். இப்போது, நீங்கள் முதிர்வுத் தொகையைத் திரும்பப் பெறாமல், மேலும் 10 ஆண்டுகளுக்கு புதிய முதலீடுகளைத் தொடர்ந்தால், உங்களால் ரூ.1 கோடி சேமிக்க முடியும்.
அதாவது, உங்கள் மொத்த வைப்புத்தொகை 25 ஆண்டுகளில் ரூ.37.5 லட்சமாக இருக்கும். இதற்கு, நீங்கள் ரூ. 65.58 லட்சம் வட்டியைப் பெறுகிறீர்கள், மொத்த கார்பஸ் ரூ. 1.03 கோடியாக இருக்கும். PPF இன் கீழ், ஒருவர் 500 ரூபாய்க்கு குறைவான தொகையை டெபாசிட் செய்யலாம். ஒரு நிதியாண்டில் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
ஒரு நிதியாண்டில் எந்த நேரத்திலும் முதலீட்டை மாதாந்திர தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 42.5% வரை வளர்ச்சி; ரூ.10,000 SIP முதலீடு, ரூ.17 லட்சம் ரிட்டன்: இந்த மிட்கேப் ஃபண்டுகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com