Actor Mohanlal : நடிகர் மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது செப்டம்பர் 23 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது.
Actor Mohanlal : நடிகர் மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது செப்டம்பர் 23 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது.
Published on: September 20, 2025 at 10:45 pm
Updated on: September 20, 2025 at 10:52 pm
புதுடெல்லி, செப்.20 2025: நாட்டின் மிக உயர்ந்த சினிமா விருதான தாதாசாகேப் பால்கே விருது (2023ஆம் ஆண்டு) நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை (செப்.20, 2025) அறிவித்துள்ளது.இந்த விருது செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
பிரதமர் பாராட்டு
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மோகன் லாலுக்கு ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஸ்ரீ மோகன்லால் சிறந்து விளங்குவதற்கும், பல்துறைத்திறனை வெளிப்படுத்துவதற்கும் ஒரு எடுத்துக்காட்டு. பல தசாப்தங்களாக தனது சிறந்த படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்துறையின் முன்னணி நட்சத்திரமாக அவர் திகழ்கிறார்.
மேலும் அவர் கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார். பல்வேறு ஊடகங்களில் அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவரது சாதனைகள் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் மோகன் லால் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் லால் 65 வயதை கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஷாருக்கான் உடன் ‘கை’கோர்த்த தீபிகா படுகோனே.. அவரே வெளியிட்ட தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com