Crime News | ஊட்டியில் இளம் பெண் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் கணவர் உள்பட அவரின் குடும்பத்தார் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Crime News | ஊட்டியில் இளம் பெண் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் கணவர் உள்பட அவரின் குடும்பத்தார் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Published on: September 6, 2024 at 6:00 pm
Updated on: September 6, 2024 at 6:24 pm
Crime News | ஊட்டியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஆஷிகா பர்வீனும், 27 வயதான இம்ரான் கானும் 2021ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கானின் குடும்பத்தினர் ஆஷிகாவை ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆஷிகா பர்வீன் ஜூன் 24ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரின் சாவில் மர்மம் உள்ளதாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ஆஷிகாவுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி விவரம் தெரியவந்தது.
இதையடுத்து கணவர் இம்ரான் கான், அவரது தாயார் யாஷ்மின் (47), முக்தார் (23) மற்றும் காலிப் (56) ஆகிய 4 பேரை கைது செய்தனர். ஆஷிகாவுக்கு காபியில் சயனைடு கலந்து கட்டாயமாக குடிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை வெளியான பின்பு போலீசார் பாரதிய நியாய் சன்ஹிதா (பி.என்.எஸ்) சட்டப்பிரிவு 103 கீழ் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலை கட்டுமானத்தில் மாநில அரசின் உரிமை பறிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com