Sarath Kumar: பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடியின் 75 – வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Sarath Kumar: பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடியின் 75 – வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on: September 19, 2025 at 10:51 am
சென்னை, செப்.19, 2025: பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இது குறித்து சரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழாவில் செல்வமகள் சேமிப்பு திட்டம், விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, எளியவர்களுக்கு ஒரு மாதம் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, மாற்றுதிறனாளிகளுக்கு காது கேட்கும் மிஷின், கல்வியாளருக்கு புத்தகம், மீனவர்களுக்கு மீன் வலைகள், மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயண சாதனைக்கு ஊக்கத்தொகை, சிகிச்சையில் உள்ள சிறுவனுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் N.சுந்தர் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, சென்னை D.மகாலிங்கம் முன்னிலையில் பாஜக முன்னோடிகளான மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகன், மாநில துணை தலைவர் M.சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை G.ஈஸ்வரன் தெரிவித்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரவுண்ட் கட்டும் பா.ஜ.க., நயினாரின் சுற்றுப்பயண விவரம்.. அண்ணாமலை வெளியிட்ட தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com