BR Gavai: “நான் அனைத்து மதத்தையும் மதிக்கிறேன்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
BR Gavai: “நான் அனைத்து மதத்தையும் மதிக்கிறேன்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
Published on: September 18, 2025 at 5:44 pm
புதுடெல்லி, செப்.18, 2025: கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலை குறித்த தனது கருத்து சர்ச்சையைத் தூண்டியதை அடுத்து, இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று (வியாழக்கிழமை) தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, அனைத்து மதங்களையும் மதிப்பதாகக் கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய தலைமை நீதிபதி, “நான் சொன்ன கருத்துக்கள் சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட முறையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் என்னிடம் கூறினார்… நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்” என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் ஏழு அடி உயர விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ உத்தரவிடக் கோரிய மனு செவ்வாய்க்கிழமை (செப்.16, 2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்த சில நாள்களுக்குப் பிறகு தலைமை நீதிபதியின் விளக்கம் வந்துள்ளது.
அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “இது முழுக்க முழுக்க விளம்பர நல வழக்கு. கடவுளிடமே போய் ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொன்னால், அமைதியாக பிரார்த்தனை செய்து தியானம் செய்யுங்கள்” என்று கூறியதாக பேச்சுகள் எழுந்தன.
சர்ச்சை என்ன?
தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைத் தூண்டின, பல்வேறு இந்து அமைப்புகள் தங்கள் நம்பிக்கைகளை அவர் கேலி செய்ததாக” கூறின.
இதற்கிடையில், தலைமை நீதிபதியின் பதவி நீக்கத் தீர்மானத்திற்கு அழைப்பு விடுக்கும் பதிவுகளும் வைரலாகின. இதற்கிடையில், பல்வேறு பயனர்கள் இந்தக் கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கின்றன எனக் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பால் தாக்கரே மனைவி சிலை மீது பெயிண்ட் வீச்சு.. சிவசேனா கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com