Selvaperunthagai : தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கும்படி காங்கிரஸ் தலைமை இதுவரை சொல்லவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
Selvaperunthagai : தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கும்படி காங்கிரஸ் தலைமை இதுவரை சொல்லவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
Published on: September 18, 2025 at 5:25 pm
சென்னை, செப்.18, 2025: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, “தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கும்படி காங்கிரஸ் தலைமை இதுவரை சொல்லவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். இவர் கட்சி கூட்டணி பற்றி பேசும் போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றார். நடிகர் விஜய்யின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வ(ப)ரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் கடந்த காலங்களில் கூட்டணி அமைத்து வென்றால் கூட, திராவிட கட்சிகள் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், நடிகர் விஜய்யின் பேச்சுக்கு பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் .
காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை.பா.ஜ.க. மீது விமர்சனம்மேலும் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசிய செல்வபெருந்தகை, திருட்டும் புரட்டும் உள்ள பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்” என்றார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லுகளை முறியடிக்க இந்தியா கூட்டணி முனைப்பு காட்டுகிறது” என்றார்.2
026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் 4 முறை போட்டி ஏற்பட்டுள்ளது.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூம், அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வும், நடிகர் விஜய்யின் த.வெ.க. ஒரு அணியாகவும், நாம் தமிழர் சீமான் மற்றொரு அணியாகவும் உள்ளனர்.
இதையும் படிங்க : வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி சிறை நிரப்பும் போராட்டம்.. அன்புமணி அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com