Delhi BMW crash: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ககன் ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கு நார்கோடிக் சோதனை நடத்தப்பட்டது.
Delhi BMW crash: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ககன் ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கு நார்கோடிக் சோதனை நடத்தப்பட்டது.
Published on: September 16, 2025 at 8:31 pm
புதுடெல்லி, செப்.16, 2025: டெல்லி பி.எம்.டபிள்யூ கார் விபத்தில் ககன் ப்ரீத் கவுர் என்ற பெண் கைதாகியுள்ளார். முன்னதாக, இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் திங்கட்கிழமை (செப்.15, 2025) கைது செய்யப்பட்டார். தற்போது இவர், இரண்டு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ககன் ப்ரீத் கவுர் ஏற்படுத்திய விபத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உயிரிழந்தார். அவரின் மனைவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ககன்ப்ரீத் கவுரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து, மது அருந்தியதற்கான சோதனை நடத்தப்பட்டது. இதில், எதிர்மறையான முடிவு கிடைத்துள்ளதாக டெல்லி போலீசார் இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தினர். அதாவது, விபத்து நடந்த நேரத்தில் ககன் ப்ரீத் கவுர், மது அருந்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பைக் மீது மோதிய கார்
ஞாயிற்றுக்கிழமை (செப்.14) மதியம் பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங் (52) விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய ககன் தீப் கவுரின் பி.எம்.டபிள்யூ காரை பறிமுதல் செய்துள்ள போலீசார், ககன் ப்ரீத் கவுரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில், 16 ஆயிரம் வெளிநாட்டினர் நாடு கடத்தல்.. ஆபரேஷன் ரெடி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com