Edappadi palanisamy Delhi Visit: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16, 2025) டெல்லி சென்றுள்ளார்.
Edappadi palanisamy Delhi Visit: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16, 2025) டெல்லி சென்றுள்ளார்.
Published on: September 16, 2025 at 2:47 pm
டெல்லி, செப்.16, 2025: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றுள்ளார். அவர் இன்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளார்.
இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, குடியரசுத் துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது புதிதாக குடியரசு துணை தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைப்பார் எனத் தெரிகிறது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாயின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை.. உதயநிதி வாக்குறுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com