Actress Meena: நடிகை மீனா இன்று (செப்.16) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Actress Meena: நடிகை மீனா இன்று (செப்.16) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Published on: September 16, 2025 at 12:28 pm
Updated on: September 16, 2025 at 12:32 pm
சென்னை, செப்.16, 2025: நடிகை மீனா இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிளாசிக் டான்ஸர் ஆன மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார்.
1990களில் தென்னிந்திய மொழிப் படங்களில் மீனா முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் பின்னணி பாடகியாகவும் மீனா இருந்துள்ளார். இதுதவிர சினிமா நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். மீனாவின் தாயார் ராஜமல்லிகா கேரளத்தின் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் மீனா சென்னையில்தான் பிறந்தார்.
அறிமுக படம்
1982ல் சிவாஜியின் நெஞ்சங்கள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான மீனா, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சிறந்த நடிகைக்கான நந்தி விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். நெஞ்சங்கள் திரைப்படத்தை மேஜர் சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, விஜயகுமார் என பலர் நடித்திருந்தனர்.
நடிகை மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமின்றி நடிகர் அஜித் மற்றும் விஜய் உடனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகை மீனாவின் பெண் குழந்தையும் சினிமாவில் நடித்து வருகிறார். தெறி படத்தில் இக்குழந்தையின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.1.65 கோடி தாரேன் என்றாங்க.. ஆனாலும் நான் மசியல.. பிரபல நடிகை ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com