Waqf Act case: மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்டத்தின் 5 ஆண்டு இஸ்லாமிய நடைமுறை விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், முஸ்லிம் அல்லாத வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைத்தது.
Waqf Act case: மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்டத்தின் 5 ஆண்டு இஸ்லாமிய நடைமுறை விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், முஸ்லிம் அல்லாத வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைத்தது.
Published on: September 15, 2025 at 4:12 pm
டெல்லி, செப்.15, 2025: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இன் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டத்தின் பல பிரிவுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அவற்றில் பிரிவு 3(1)(r)ம் அடங்கியுள்ளது. அதாவது, இது ஒரு நபர் வக்ஃப் ஒன்றை உருவாக்க ஐந்து ஆண்டுகள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்பதைக் கட்டளையிடுகிறது. இந்த நிபந்தனைக்கு இணங்குவதைத் தீர்மானிக்க மாநில அரசுகள் விதிகளை உருவாக்கும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 3C(2)-ன் விதிமுறையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அந்த விதி, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை வக்ஃப் சொத்து அவ்வாறு கருதப்படாது என்று கூறியது.
தொடர்ந்து, “நியமிக்கப்பட்ட அதிகாரி சொத்து அரசாங்கச் சொத்து என்று தீர்மானித்தால், அவர் வருவாய் பதிவேடுகளில் தேவையான திருத்தங்களைச் செய்து, இது தொடர்பாக மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறும் பிரிவு 3C(3)-ஐயும் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், வக்ஃப் வாரியங்களுக்கு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கும் விதியை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. முடிந்தவரை, வாரியங்களின் அலுவல் ரீதியான உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மத்திய வக்ஃப் கவுன்சிலில் நான்கு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், மாநில வக்ஃப் வாரியங்களில் மூன்று பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் கோர விபத்து.. பி.எம்.டபிள்யூ காரை இயக்கிய பெண் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com