Telangana: உடல் நலப் பிரச்னைகள் காரணமாக, உயர்மட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் தெலங்கானாவில் சரணடைந்தார்.
Telangana: உடல் நலப் பிரச்னைகள் காரணமாக, உயர்மட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் தெலங்கானாவில் சரணடைந்தார்.
Published on: September 13, 2025 at 10:21 pm
ஹைதராபாத், செப்.13 2025: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் பிரிவு) உயர்மட்ட உறுப்பினரும், கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி என்ற மல்லோஜுலா கோட்டேஷ்வர் ராவின் மனைவியுமான பொதுலா பத்மாவதி என்ற கல்பனா, உடல்நலக் காரணங்களுக்காக இன்று (சனிக்கிழமை) தெலுங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார்.
கல்பனா, 43 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து, மைனாபாய், மைனக்கா, சுஜாதா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் செயல்பட்ட, சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் ஒரே பெண் மத்திய குழு உறுப்பினரான 62 வயதான நிலையிலும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இவர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஜிதேந்தர் முன்னிலையில் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளார். முன்னதாக, அவருக்கு ₹1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
CPI (Maoist) Central Committee member Potula Padmavati alias Kalpana Jyothi alias Sujatha, who served the party for 43 years, has surrendered before the Telangana Govt.
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) September 13, 2025
As per Hon’ble HM Shri @AmitShah Ji’s call, I once again appeal to Maoists: Lay down arms. Armed revolutions… pic.twitter.com/NAt0CZuHyd
இந்த நிலையில், பல தசாப்தங்களாக தலைமறைவாக இருந்த இவர், தனது நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி இந்த முடிவை எடுத்துள்ளார். அதன்படி, அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்தவும், தனது உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளவும், தனது குடும்பத்துடன் அமைதியாக வாழவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பத்மாவதியின் தலைக்கு ₹1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது, அதில் தெலுங்கானா அரசு அறிவித்த ₹25 லட்சம் அடங்கும். இந்நிலையில், அவர் சரணடைந்தவுடன் ₹25 லட்சத்திற்கான டிமாண்ட் டிராஃப்டை அவரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பேசிய டிஜிபி, “தெலுங்கானா அரசின் மறுவாழ்வுக் கொள்கையின்படி அவருக்கு மேலும் சலுகைகள் கிடைக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 10 நக்சல்கள் சுட்டுக்கொலை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com