Anbumani Ramadoss: நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத தி.மு.க.வை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத தி.மு.க.வை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: September 10, 2025 at 7:16 pm
Updated on: September 10, 2025 at 7:17 pm
சென்னை, செப்.10 2025: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் ஊழல்களால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். நெல் கொள்முதல் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, உழவர்களை கசக்கிப் பிழியும் கையூட்டு கலாச்சாத்தை மட்டும் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அறுவடையும் முன்கூட்டியே தொடங்கியதால், வழக்கமாக அக்டோபர் மாதம் 1&ஆம் தேதி தொடங்கும் நெல் கொள்முதல் இம்முறை செப்டம்பர் மாதமே தொடங்கியிருக்கிறது.
2024&ஆம் ஆண்டில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2405க்கும், சன்ன ரக நெல் ரூ.2450க்கும் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.95 உயர்த்தப்பட்டு, முறையே ரூ.2500, ரூ.2545 வீதம் கொள்முதல் செய்யப் படும் போதிலும், அதனால் உழவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. காரணம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரக்கமே இல்லாமல் உழவர்களிடமிருந்து கட்டாயமாக கையூட்டு பெறப்படுவது தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு பணியாளர்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.275 வீதம் கையூட்டாக வசூலித்துக் கொள்கின்றனர் என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனக் கூறியுள்ள அன்புமண ராமதாஸ், “உழவர்களிடமிருந்து கையூட்டாகப் பெறப்படும் தொகை உயரதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. வறுமையில் வாடும் உழவர்களிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com