Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Published on: September 10, 2025 at 4:05 pm
Updated on: September 10, 2025 at 4:08 pm
திருப்பதி, செப்.10, 2025: நடிகர் ஸ்ரீகாந்த் திருப்பதியில் இன்று (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரின் மனைவியும் உடனிந்தார். தமிழில் ரோஜா கூட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ஸ்ரீகாந்த். இவர் அண்மையில் சினிமா வாய்ப்புகள் அதிகமின்றி ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மற்றொரு நடிகரான கிருஷ்ணா பெயரும் அடிபட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமானது.
நடிகர் ஸ்ரீகாந்த் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். #Srikanth | #tamilcinema | #Tirupati pic.twitter.com/HkxbCvybf5
— Dravidan Times (@DravidanTimes) September 10, 2025
இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். தொடர்ந்து ஊடக வெளிச்சமின்றி ஒதுங்கி காணப்பட்டார். இந்த நிலையில், திருமலையில் இன்று அவர் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த போது நடிகர் ஸ்ரீகாந்த், பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘விஷால் தாலிகட்டிய பின்னர் திருமணம் செய்வேன்’; அதர்வா முரளி ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com