Emmanuel Macron: பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறோம் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான சச்சரவுகளுக்கு மத்தியில் இவரின் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.
Emmanuel Macron: பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறோம் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான சச்சரவுகளுக்கு மத்தியில் இவரின் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.

Published on: July 25, 2025 at 8:25 pm
பாரிஸ், ஜூலை 25 2025: பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதாக வியாழக்கிழமை (ஜூலை 24 2025) பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் இந்த முடிவைக் கண்டித்துள்ளது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் இந்த முடிவை முறைப்படுத்துவதாக மக்ரோன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். அதில், “இன்றைய உலகில் அவசர விஷயம் என்னவென்றால், காசாவில் போர் நின்று பொதுமக்கள் காப்பாற்றப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ட்வீட்
Consistent with its historic commitment to a just and lasting peace in the Middle East, I have decided that France will recognize the State of Palestine.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 24, 2025
I will make this solemn announcement before the United Nations General Assembly this coming September.… pic.twitter.com/VTSVGVH41I
இஸ்ரேலுக்கு அழுத்தம்?
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸின் இந்த நடவடிக்கை இஸ்ரேல் மீது கூடுதல் இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகள் உட்பட 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன.
1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களான கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசாவை இணைத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனியர்கள் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் அரசாங்கமும் அதன் பெரும்பாலான அரசியல் வர்க்கமும் நீண்ட காலமாக பாலஸ்தீன அரசை எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com