MDMK Party legal notice to Nanjil Sampath: பிரபல பேச்சாளரும், ம.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியுமான நாஞ்சித் சம்பத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
MDMK Party legal notice to Nanjil Sampath: பிரபல பேச்சாளரும், ம.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியுமான நாஞ்சித் சம்பத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Published on: July 22, 2025 at 3:25 pm
சென்னை, ஜூலை 22 2025: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாஞ்சில் சம்பத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து ம.தி.மு.க தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நற்பெயரை கெடுக்கும் வகையில் தீய நோக்கத்தோடு செயல்பட்டு, பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் மீது பல்வேறு சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வகையில் பொதுவெளியில் குற்றசாட்டுகளை பரப்பி வரும் நாஞ்சில் சம்பத் மீது கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மான நஷ்ட வழக்கு தொடர வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிரபல தமிழ் தினசரி நாளிதழுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என ம.தி.மு.க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.வில் என்ன நடக்கிறது?
ம.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பதவி விலகி வருகின்றனர். இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர் மீது வைகோ ரூ.300 கோடி ஊழல் குற்றச்சாட்டை வைத்தார்.
இதற்கிடையில் ம.தி.மு.க.வில் இருந்து மல்லை சத்தியா விலகினார். அவரை ஈழ புலிகளுக்கு எதிரான மாத்தையுடன் ஒப்பிட்டு பேசினார் வைகோ.
மேலும் அவர் தமக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் வைகோ குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையில் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாஞ்சில் சம்பத் வைகோ மகன் துரைக்கு ஒன்றும் தெரியாது என்றும் வைகோவை விஷப் பாம்பு என்றும் விமர்சித்தார் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து வைகோ தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தி.மு.க. தேர்தலில் தனித்து நிற்குமா? காங்கிரஸின் திருச்சி வேலுசாமி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com