Actor Madhavan: இந்தி மட்டுமல்ல தனக்கு மராத்தியும் தெரியும் என போல்ட் ஆக பேசியுள்ளார் நடிகர் மாதவன்.
Actor Madhavan: இந்தி மட்டுமல்ல தனக்கு மராத்தியும் தெரியும் என போல்ட் ஆக பேசியுள்ளார் நடிகர் மாதவன்.
Published on: July 16, 2025 at 10:05 am
Updated on: July 16, 2025 at 10:10 am
மும்பை, ஜூலை 16 2025: நடிகர் மாதவன் தனக்கு இந்தியும்- மராத்தியும் தெரியும் என போல்ட் ஆக பேசியுள்ளார். இந்தி- மராத்தி மொழி சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் மாதவனின் இந்தப் பேட்டி கவனம் ஈர்த்து வருகிறது.
பொதுவாகவே, இந்தியில் சரளமாகப் பேசும் திறனுக்காகவும் நடிகர் ஆர். மாதவன் பரவலாகப் பாராட்டப்படுகிறார். இந்நிலையில், இது தொடர்பான பேட்டியில் மொழி எனக்கு ஒருபோதும் ஒரு தடையாக இருந்ததில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் தனக்கு சரளமாகப் பேசத் தெரியும் என்றார். அப்போது, கோலாப்பூரில் படித்தேன். எனவே நான் அங்கு மராத்தியை கற்றுக் கொண்டேன் என்றார்.
மேலும், இதுவரை இந்தி அல்லது மராத்தி பேசுவதில் எந்தப் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை என்றார். தொடர்ந்து தனக்கு மொழி ஒரு பிரச்னையாக இருந்ததில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க அடுத்த விஜயகாந்த் இவர்தான்.. சின்ன கவுண்டர் பட இயக்குனர் ஓபன் டாக்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com