Public meetings on actor Vijay’s birthday: நடிகரும் த.வெ கழக தலைவருமான விஜய் பிறந்தநாளில் கொள்கை விளக்க கூட்டம் நடத்த, கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Public meetings on actor Vijay’s birthday: நடிகரும் த.வெ கழக தலைவருமான விஜய் பிறந்தநாளில் கொள்கை விளக்க கூட்டம் நடத்த, கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on: June 16, 2025 at 11:28 am
சென்னை, ஜூன் 16 2025; நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கட்சி 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் பொதுக்கூட்டத்திலேயே தாம் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிரானவன் என மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசை கடுமையாக சாடினார்.
குறிப்பாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டதாக கூறினார். மேலும் இங்கு அனைவரும் சமம் என்பதை கூறிய நடிகர் விஜய் திமுகவில் நிலவிவரும் வாரிசு அரசியலையும் விமர்சித்தார்.
மேலும் தமிழக வெற்றி கழகம் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் உயர் மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளை கௌரவித்து வருகிறது.
இதற்கிடையில் தமிழக வெற்றி கழகத்திற்கு தொண்டர்களை இணைப்பது குறித்தும், பூத் கமிட்டிகளை நிர்வகிப்பது குறித்தும் ஏற்கனவே பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவன தலைவருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சிப் பொதுக் கூட்டங்கள் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டங்கள் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளன. மேலும், இந்த பொதுக்கூட்டங்கள் கொள்கை விளக்க கூட்டங்களாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க; கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com