Holiday for 7 schools in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5 2025) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்.
Holiday for 7 schools in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5 2025) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்.
Published on: June 5, 2025 at 11:38 pm
சென்னை, ஜூன் 5 2025: சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6 2025) நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பதால், இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது от 601 சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகட.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com