Asaduddin Owaisi: பாகிஸ்தான் அனைத்து முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதத்தை அசாதுதீன் ஓவைசி நிராகரித்தார். மேலும், “இந்தியா ஒரு பெரிய, பெருமைமிக்க முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது” என்றார்.
Asaduddin Owaisi: பாகிஸ்தான் அனைத்து முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதத்தை அசாதுதீன் ஓவைசி நிராகரித்தார். மேலும், “இந்தியா ஒரு பெரிய, பெருமைமிக்க முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது” என்றார்.
Published on: May 29, 2025 at 2:44 pm
ரியாத், மே 29 2025: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறது எனவும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேச சவுதி அரேபியா சென்றுள்ள அசாதுதீன் ஓவைசி இது குறித்து பேசுகையில், “அனைத்து முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பாகிஸ்தான் கூறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இந்தியா ஒரு பெரிய, பெருமைமிக்க முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு. இந்தியாவில் 240 மில்லியன் பெருமைமிக்க இந்திய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், இந்தியா அவர்களை காயப்படுத்துகிறது என பாகிஸ்தான் பொய்யான பரப்புரையை எழுப்புகிறது.
பாகிஸ்தான் பொய் பரப்புரை
#WATCH | Riyadh, Saudi Arabia | AIMIM chief and MP Asaduddin Owaisi says, "This is the most unfortunate that Pakistan gives out a wrong message to the Arab world and the Muslim world that we are a Muslim country and India is not. There are 240 million proud Indian Muslims living… pic.twitter.com/WlhPmHn1MH
— ANI (@ANI) May 28, 2025
குறிப்பாக, அரபு உலகிற்கும் முஸ்லிம் உலகிற்கும் பாகிஸ்தான் தவறான செய்தியை வெளியிடுகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது” என்றார். மேலும், “பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களை நிறுத்தினால், தெற்காசியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படும். தெற்காசியாவில் முன்னேற்றம் ஏற்படும்” என்றார்.
மேலும், “பாகிஸ்தான் நாட்டை நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) மீண்டும் க்ரே (சாம்பல்) நிற பட்டியலில் வைக்க வேண்டும்” எனவும் ஓவைசி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : ‘இன்னும் அதிகமாக செய்ய முடியும்’; பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com