AB de Villiers: ஆர்சிபி அணியைப் பற்றி ஐபிஎல் வர்ணனையாளர்கள் கூறிய எதிர்மறையான கருத்துக்களை ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக சாடினார்.
AB de Villiers: ஆர்சிபி அணியைப் பற்றி ஐபிஎல் வர்ணனையாளர்கள் கூறிய எதிர்மறையான கருத்துக்களை ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக சாடினார்.
Published on: May 29, 2025 at 2:07 pm
பெங்களூரு, மே 29 2025: ‘எங்கள் (ஆர்.சி.பி) பந்து வீச்சாளர்கள் பயனற்றவர்கள் என்று அவர்கள் (ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணணையாளர்கள்) சொன்னார்கள்’ என கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். மேலும், ஆர்சிபி அணியைப் பற்றி ஐபிஎல் வர்ணனையாளர்கள் கூறிய எதிர்மறையான கருத்துக்களை ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக சாடினார்.
இது குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்து வீச்சாளர்கள் குறித்து சோம்பேறித்தனமான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் ஐ.பி.எல் வர்ணணையாளர்களால் சொல்லப்பட்டன. 18வது சீசனின் கடைசி லீக் போட்டியின் போது ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டி வெறித்தனமாக இருந்தது.
இந்த நிலையில், லக்னோவில் நடந்த ஆர்சிபி vs எல்எஸ்ஜி போட்டியின் போது வர்ணனை தன்னை “மிகவும் கோபப்படுத்தியது” என்று டிவில்லியர்ஸ் எந்த பெயரையும் குறிப்பிடாமல் கூறினார். முன்னதாக, ஏகாம்னா ஸ்டேடியத்தில் நடந்த அதிக ஸ்கோர் கொண்ட போட்டியில், ஆர்சிபி அணி எல்எஸ்ஜி நிர்ணயித்த 228 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களில் துரத்திச் சென்று ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன்’: விராத் கோலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com