Actor Vijay Antony: நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் சசியின் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Actor Vijay Antony: நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் சசியின் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Published on: May 28, 2025 at 8:55 pm
Updated on: May 28, 2025 at 9:03 pm
சென்னை மே 28 2025: நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் சசி கூட்டணி பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய உள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த திரைப்படம் பிச்சைக்காரன். நடிகர் ஜீவாவின் டிஷ்யூம் என்ற திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் இவரின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.
இந்த நிலையில் டிஷ்யூம் திரைப்படத்தை இயக்கிய சசியின் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் மீண்டும் இணைய உள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள மார்கன் என்ற திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ” டைரக்டர்கள் மீதுள்ள நம்பிக்கையால் நான் படம் தயாரிக்கிறேன்; என்னிடம் நிறைய காசு இருக்கிறதோ என எண்ண வேண்டாம். கடன் வாங்கி தான் நான் படங்களை தயாரித்து வருகிறேன்; வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்தி வருகிறேன்” என்றார்.
இந்தத் தவறை செய்யாதீர்கள்- விஜய் ஆண்டனி
தொடர்ந்து பட விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ” நடிகராக அறிமுகமான பின்பு நான் இசை அமைப்பதை விட்டு விட்டேன்; இந்த தவறை யாரும் செய்யாதீர்கள். நான் படங்களில் மீண்டும் இசை அமைக்க உள்ளேன்” என்றார். மீண்டும் சசி இயக்கத்தில் இணைய உள்ள படத்தை ரமேஷ் பிள்ளை என்பவர் தயாரிக்கிறார் என்பதை கூறிய நடிகர் விஜய் ஆண்டனி இந்தப் படம் உண்மைச் சம்பவம் ஒன்றை தழுவி எழுதப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: சிக்கென மாறிய ரித்திகா சிங்; உடல் எடையை குறைத்தது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com