சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த வேன்; பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி

Tuticorin: சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Published on: May 17, 2025 at 11:13 pm

தூத்துக்குடி, மே 17 2025: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பேர் கிணற்றுக்குள் நீந்தி வெளியேறினர். இது குறித்த தகவலின் அடிப்படையில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிணற்றுக்குள் வேன் பாய்ந்ததில் 5 பேர் மரணம் அடைந்தது விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் தஞ்சாவூரில் இருந்து திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றவர்கள் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் ஓ.பி.எஸ்; நயினார் நாகேந்திரன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com