நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஜனவரிக்கு தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஜனவரிக்கு தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.
Published on: September 2, 2024 at 10:43 am
Actor Vijay Party | நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ந்து, மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த திட்டமிட்டனர்.
இந்த மாநாடு செப்.23ஆம் தேதி நடக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்காக விக்கிரவாண்டியில் 85 ஏக்கர் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : மதுரையில் விஜய் கட்சி கொடிக்கம்பம் நட அனுமதி மறுப்பு: காவல்துறை விளக்கம்
இந்த நிலையில் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால மாநாடு 2024 ஜனவரிக்கு தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர் தடைகள் வருவதால் இது தொடர் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளாராம் புஸ்ஸி ஆனந்த்.
முன்னதாக ஆக.28ஆம் தேதி புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாநாட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் 1.50 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்த நிலையில் மாநாட்டுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். ஆனால் அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘அமெரிக்காவில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை’: மு.க. ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com