மாவு ஏதும் பிசையாமல் பத்தே நிமிடத்தில் சட்டுன்னு செய்யக்கூடிய மொறுமொறுப்பான முட்டை பப்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
February 6, 2025
மாவு ஏதும் பிசையாமல் பத்தே நிமிடத்தில் சட்டுன்னு செய்யக்கூடிய மொறுமொறுப்பான முட்டை பப்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
Published on: September 2, 2024 at 6:32 am
Updated on: September 2, 2024 at 6:42 am
how to make egg puffs | மாவு ஏதும் பிசையாமல் பத்தே நிமிடத்தில் சட்டுன்னு செய்யக்கூடிய மொறுமொறுப்பான முட்டை பப்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
அவித்த முட்டை -3
மைதா மாவு- 1கப்
தண்ணீர் -1 கப்
தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் -3
உப்பு- தேவையான அளவு
இஞ்சி -1 துண்டு
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அவித்த முட்டைகளை இரண்டு சம பாகங்களாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயத்தினை இதனுடன் சேர்க்க வேண்டும். வெங்காயம் பாதி வெந்ததும் இதனுடன் பச்சை மிளகாய், உப்பு மற்றும் தட்டிய இஞ்சி துண்டினை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் சிறிது சுடு தண்ணீர் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அடுத்து மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கட்டி விலாமல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசை கல்லில் ஒரு குழி கரண்டி மாவினை ஊற்றி ஆப்பம் சுடுவது போல் மாவினை சுற்றி எடுக்க வேண்டும். தோசை ஒரு பக்கம் வெந்ததும் எடுத்து வைக்க வேண்டும். இதேபோல் மீதமுள்ள மாவினை தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இரண்டு தோசையை ஒன்றின் மேல் ஒன்று வைத்து அதன் மத்தியில் ஏற்கனவே தயார் செய்த வெங்காய கலவை மற்றும் முட்டையினை வைத்து பப்ஸ் போன்று மடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தோசை சூடாக இருக்கும் பொழுதே இதனை தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்த பப்ஸினை சேர்த்து பொரிக்க வேண்டும். அடுப்புத்தீயை சிம் மற்றும் மீடியம் ஃப்ளேமில் மாற்றி மாற்றி வைத்து பப்ஸினை பதமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது மொறுமொறுப்பான முட்டை பப்ஸ் தயாராகிவிட்டது.
இதையும் படிங்க கேரள பழம் புரி ஸ்வீட்: வெங்கடேஷ் பட் ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com