Himanta Biswa Sarma: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Himanta Biswa Sarma: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Published on: April 26, 2025 at 2:05 pm
கவுகாத்தி, ஏப்.26 2025: அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்த பிஸ்வாஸ் சர்மா, “பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னதாக, “தனது பேஸ்புக் டைம்லைனில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை பதிவிட்டதற்காக அஸ்ஸாமின் கரிம்கஞ்சைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முகம்மது முஸ்தக் அகமது என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்நாட்டுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இவர், கரிம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய்குட் கிராமத்தில் வசிப்பவர் ஆவார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
भारत और पाकिस्तान की विचारधाराएँ हमेशा से अलग रही हैं और आगे भी अलग रहेंगी। असम की धरती पर रहकर अगर कोई पाकिस्तान के पक्ष में बोलता है, तो उसकी "खास खातिरदारी" की जाएगी।#PahalgamTerroristAttack#AssamPanchayatPolls pic.twitter.com/aste9oORTR
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 26, 2025
இந்த நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சனிக்கிழமை (ஏப்.26 2025) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிந்து நதி நீரை தடுக்க இந்தியா சதி: பாகிஸ்தான் பிரதமர் அலறல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com