Vice Chancellors Conference: கோவை அருகே உதகமண்டலத்தில் இன்று (ஏப்ரல் 25 2025) துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
Vice Chancellors Conference: கோவை அருகே உதகமண்டலத்தில் இன்று (ஏப்ரல் 25 2025) துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
Published on: April 25, 2025 at 11:46 am
கோவை ஏப்ரல் 25 2025: கோயம்புத்தூரை அடுத்த உதகமண்டலத்தில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப்ரல் 25 2025) தொடங்கியது. இந்த மாநாடு தமிழக கவர்னர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் ஊட்டி வந்தார். இந்த மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடர்பாக சில குழப்பங்கள் நீடிக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளித்த கவர்னர் மாளிகை, இந்த மாநாடு ஜனவரியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என தெரிவித்திருந்தது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு என்றும் தமிழக அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையே எவ்வித சச்சரவும் இல்லை எனவும் விளக்கம் அளித்து இருந்தது.
இவ்வாறு குழப்பங்கள் இருப்பதால் தமிழக அரசு பல்கலைக்கழக வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பில் நீக்கப்பட்டவர், அமைச்சரவையில் தொடரலாமா? பொன்முடி விவகாரத்தில் வானதி கேள்வி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com