IMD | செப்டம்பரில் உருவாகும் லா நினா காரணமாக வட இந்திய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IMD | செப்டம்பரில் உருவாகும் லா நினா காரணமாக வட இந்திய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: September 1, 2024 at 1:44 pm
Updated on: September 1, 2024 at 3:03 pm
India Meteorological Department | லா நினா அல்லது மத்திய பசிபிக் பெருங்கடலின் குளிர்ச்சியான காலநிலை காரணமாக செப்டம்பரில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை உறுதி செய்துள்ள, இந்திய வானிலை ஆய்வு மையம் செப்டம்பர் மாதத்தில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது, மேலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
செப்டம்பரில் பருவமழை பின்வாங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், லா நினாவின் தாக்கம் வங்காள விரிகுடாவில் தீவிரமான “சூறாவளி”க்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக மாதத்தின் பெரும்பகுதி மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து சனிக்கிழமை (ஆக.31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் இயக்குனர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹபத்ரா, “செப்டம்பரில் பருவமழை வழக்கத்தை விட 9% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு வரைபடங்களின்படி, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் டெல்லியின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் , “பருவமழை திரும்பப் பெறுவது வழக்கமாக செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கும், ஆனால் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், இப்போதைக்கு அதை முன்னறிவிக்க இயலாது” என்றார்.
செய்தியாளர் ஜே.கே
புதுடெல்லி
இதையும் படிங்க குஜராத்தில் வீடுகளில் புகுந்த முதலலைகள்: 2 நாளில் 24 மீட்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com