Mayonnaise: தமிழ்நாட்டில் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Mayonnaise: தமிழ்நாட்டில் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: April 24, 2025 at 3:27 pm
சென்னை, ஏப்.24 2025: தமிழ்நாட்டில் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மயோனசை உண்பதால் இரைப்பைக் குடல் தொற்று உள்ளிட்ட பிரச்கைள் வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், முட்டை அடிப்படையிலான மயோனஸ் ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வகை மயோனஸ்கள் பல சந்தர்ப்பங்களில், சில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் லால்வீனா, முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசேவை ஓராண்டு தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முட்டை மயோனஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் ஏப்ரல் 8 முதல் ஒரு வருடத்திற்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 7ஆம் வகுப்பு மாணவிக்கு தோப்புக்கரணம்: அரசு பள்ளி ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com