Sivaganga: சிவகங்கையில் வீட்டுப் பாடம் எழுதாமல் சென்ற மாணவிக்கு தோப்புக்கரணம் தண்டனை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Sivaganga: சிவகங்கையில் வீட்டுப் பாடம் எழுதாமல் சென்ற மாணவிக்கு தோப்புக்கரணம் தண்டனை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Published on: April 23, 2025 at 7:51 pm
சிவகங்கையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வருபவர் சித்ரா. இவர், ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு வீட்டுப்பாடம் அளித்துள்ளார். அந்த வீட்டுப் பாடத்தை மாணவி செய்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற ஆசிரியை சித்ரா, மாணவியை தோப்புக்கரணம் போட செய்துள்ளார்.
அதுவும் நான் ஒரு தோப்புக் கரணங்கள் என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் அழுது கொண்டே கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்ராவின் தாயார் நடந்த சம்பவம் குறித்து ஆசிரியை மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரையின் பெயரில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியை சித்ராவுக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு தோப்புக்கரணத்தை தண்டனையாக அளித்த ஆசிரியைக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் கர்ப்பிணி காதலியை கரம் பிடிக்க மறுப்பு: உயிருடன் கொளுத்திய வாலிபர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com