Actress Rambha: சினிமாவில் இடைவெளி எடுத்தது ஏன் என்பது தொடர்பாக தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார் நடிகை ரம்பா. 1990 காலகட்டங்களில் நடிகை ரம்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது.
Actress Rambha: சினிமாவில் இடைவெளி எடுத்தது ஏன் என்பது தொடர்பாக தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார் நடிகை ரம்பா. 1990 காலகட்டங்களில் நடிகை ரம்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது.
Published on: April 23, 2025 at 6:08 pm
சென்னை ஏப்ரல் 23 2025: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. கதாநாயகர்களுக்கு சரி சமமாக இவருக்கும் ரசிகர் பட்டாளம் இருந்தது. இவரை ரசிகர்கள் தொடை அழகி என அழைத்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்பா, தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
தற்போது ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமாவில் அவர் தலை காட்டத் தொடங்கியுள்ளார். தற்போது சின்ன திரையில் மட்டும் தலை காட்டிய ரம்பா விரைவில் பெரிய திரையிலும் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரம்பா மனம் திறந்து பேசி உள்ளார். அதில், “தமது குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டு முறை அவர்களுடன் இருக்க நான் விரும்பினேன்; அவர்களுக்கு நான் ஒரு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன்” என்றார். நடிகை ரம்பாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்.. இசையமைக்கிறார் ஏ.ஆர் ரகுமான்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com