Sourav Ganguly: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் சினிமா நிகழ்ச்சியில் தோன்ற உள்ளார்.
Sourav Ganguly: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் சினிமா நிகழ்ச்சியில் தோன்ற உள்ளார்.
Published on: April 21, 2025 at 8:23 pm
கொல்கத்தா, ஏப். 21 2025: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மீண்டும் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சவுரவ் கங்குலி தனியார் சேனலுடன் ₹125 கோடிக்கான 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அவர் ‘பிக் பாஸ் வங்காளம் (Bigg Boss Bangla)மற்றும் புதிய க்விஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் களம் இறங்க உள்ளார். இவை இரண்டும் 2026 ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளின் தயாரிப்பு பணிகள் 2025 ஜூலை மாதம் தொடங்கும். கங்குலியின் இந்த புதிய பயணம், அவரது தொலைக்காட்சி வரலாற்றில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
மேலும், நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’ என்ற வெப்சீரிஸின் விளம்பரத்திலும் கங்குலி தோன்றியுள்ளார். இந்த தொடரில் அவர் நடிக்கவில்லை என்றாலும், விளம்பர வீடியோக்களில் தோன்றி, ரசிகர்களை கவர்ந்துள்ளார். கங்குலியின் இந்த தொலைக்காட்சி பிரவேசம், அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள கங்குலி, “தொலைக்காட்சி மக்களுடன் இணைவதற்கு எனக்கு ஒரு சிறப்பு வழியைக் கொடுத்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் அறிவு இரண்டையும் கொண்டாடும் இரண்டு அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு புதிய இன்னிங்ஸ், நான் விளையாட்டில் கொண்டு வந்த அதே ஆர்வத்துடன் அதை விளையாடத் தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ‘வாழும் யுவராஜ்; தூக்கத்தை தொலைத்த சுந்தர் பிச்சை’: வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் பாராட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com