Actor Balakrishnan: ஹைதராபாத் ஏலத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆடம்பரமான கார் நம்பர் பிளேட்டை வாங்கி அசத்தினார். இந்த தனித்துவமான எண்ணுக்கு ₹7.75 லட்சம் செலவு செய்துள்ளார்.
Actor Balakrishnan: ஹைதராபாத் ஏலத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆடம்பரமான கார் நம்பர் பிளேட்டை வாங்கி அசத்தினார். இந்த தனித்துவமான எண்ணுக்கு ₹7.75 லட்சம் செலவு செய்துள்ளார்.
Published on: April 20, 2025 at 7:22 pm
ஹைதராபாத், ஏப்.20 2025: சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.டி.ஏ ஏலத்தில் நடிகரும் இந்துபூர் எம்எல்ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு ஆடம்பரமான கார் பதிவு எண்ணைப் பெறுவதற்காக பெரும் பணத்தை செலவிட்டார்.
தனது புதிய வாகனத்திற்கான எண்ணைப் பெற நடிகர் ₹7,75,000 செலவிட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், தெலுங்கானா பிராந்திய போக்குவரத்து ஆணையம் (RTA) சனிக்கிழமை (ஏப்.19 2025) அதன் கைரதாபாத் அலுவலகத்தில் ஒரு ஏலத்தை நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
இதில், நடிகர் பாலகிருஷ்ணா ஆன்லைன் ஏலம் மூலம் பங்கேற்றுள்ளார். அப்போது அவர், TG09 F0001 என்ற எண்ணைப் பெறுவதற்காக ரூ.7.75 லட்சம் செலவிட்டுள்ளார். எனினும், அவர் ஏலம் எடுத்த வாகனத்தின் பிராண்ட் இன்னும் தெரியவில்லை. நடிகர் பாலகிருஷ்ணா இவ்வளவு தொகையைச் செலவழிப்பது இது முதல் முறை அல்ல; சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது பென்ட்லிக்கு TS09 EU0001 ஐப் பெற ₹7 லட்சத்திற்கு மேல் செலவிட்டார்.
பாலகிருஷ்ணா நடிப்பில் இந்த ஆண்டு (2025) டாக்கு மகராஜ் என்ற படம் வெளியானது. இந்தப் படம், கேம் சேஞ்சர் மற்றும் சங்கராந்திகி வஸ்துனம் ஆகிய படங்களின் போட்டி இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகை குஷ்புவை தொடர்ந்து இந்த நடிகைக்கு கோவிலா? பரபரக்கும் சினிமா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com