Veera Dheera Sooran Part 2: சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் ஒடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்தப் படத்தை எப்போது பார்க்கலாம் என்பது இங்கே உள்ளது.
Veera Dheera Sooran Part 2: சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் ஒடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்தப் படத்தை எப்போது பார்க்கலாம் என்பது இங்கே உள்ளது.
Published on: April 19, 2025 at 10:20 pm
சென்னை, ஏப்.19 2025: விக்ரமின் தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் படமான வீர தீர சூரன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியான சில வாரங்களிலேயே இரண்டாம் பாகம் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் பிருத்வி ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அமேசான் பிரைமில் வெளியீடு
இந்த நிலையில், விக்ரமின் வீர தீர சூரன் இரண்டாம் பாகம் ஓடிடி தளத்தில் 2025 ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அருண் குமார் எழுதி டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்னதாக சட்ட சிக்கலை எதிர்கொண்டது. இறுதியில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2025 மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க : சச்சின்! ரீ ரிலீஸ்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com