Fixed deposit Interest Rates: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பேங்குகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Fixed deposit Interest Rates: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பேங்குகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Published on: April 19, 2025 at 9:54 am
சென்னை, ஏப்.19 2025: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக நிர்ணயித்துள்ளது. இது, இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாவது ரெப்போ வட்டி விகிதக் குறைப்பாகும். இந்தக் குறைப்பு வங்கிகள் தங்கள் வைப்புத்தொகை மற்றும் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
இந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொருந்தும்.
ஹெச்.டி.எஃப்.சி ஃபிக்ஸட் டெபாசிட்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி 7 முதல் 29 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 3% ஆகவும், 30 முதல் 45 நாள்கள் வரையிலான எஃப்.டி.களுக்கு 3.50 சதவீதமும் வழங்குகிறது.
மேலும், 46 முதல் 89 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் 4.50% ஆகவும், 90 நாள்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான எஃப்.டிக்கு வட்டி விகிதம் 4.50% ஆகவும், 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.75% வட்டி விகிதமும், 9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான எஃப்.டி.க்கு 6% வட்டி விகிதமும் வழங்குகிறது.
தொடர்ந்து, 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான எஃப்.டி.களுக்கு வட்டி விகிதம் 6.60% ஆகவும், 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் 7.10% ஆகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான எஃப்.டிக்கு 7.25% வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, 21 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை, 3 முதல் 5 ஆண்டுகள் வரை மற்றும் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் அனைத்து கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும் 0.50 சதவீதம் கூடுதலாக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்தக் குடிமக்களுக்கு அதிகப்பட்சமாக 7.75 சதவீதம வரை வட்டி வழங்கப்படுகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை 7 முதல் 29 நாள்களுக்கு 3% வட்டியும், 30 முதல் 45 நாள்களுக்கு 3.50% வட்டியும், 46 முதல் 60 நாள்களுக்கு 4.25% வட்டியும் வழங்குகிறது.
தொடர்ந்து, 61 முதல் 90 நாள்களுக்கு 4.50% வட்டியும் வழங்குகிறது. 91 முதல் 184 நாள்களுக்கு 4.75% வட்டியும், 185 முதல் 270 நாள்களுக்கு 5.75% வட்டியும், 271 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான வைப்புத்தொகைக்கு 6% வட்டியும் வழங்கப்படுகிறது.
மேலும், 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு 6.70% வட்டியும், 15 முதல் 18 மாதங்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு 7.25% வட்டியும் வழங்கப்படுகிறது.
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு 7.25% வட்டியும், 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு 7% வட்டியும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு 6.90% வட்டியும் வழங்கப்படுகிறது.
5 ஆண்டு வரி சேமிப்பு நிரந்தர வைப்புத்தொகைக்கு 7% வட்டியும் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கூடுதலாக 0.50% அனுபவிக்கிறார்கள், இதனால் 15 முதல் 18 மாதங்களுக்கு விகிதம் 7.75% ஆக அதிகரிக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி வட்டி விகிதங்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7 முதல் 45 நாட்களுக்கு 3.50%, 46 முதல் 179 நாட்களுக்கு 5.50%, 180 முதல் 210 நாட்களுக்கு 6.25%, 211 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை 6.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதிகபட்ச விகிதம் 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை 6.70%, 2 முதல் 3 ஆண்டுகள் வரை 6.90%, 3 முதல் 5 ஆண்டுகள் வரை 6.75% மற்றும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 6.50% ஆகும்.
மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி பெறுகிறார்கள். மேலும், “எஸ்பிஐ வி கேர்” திட்டத்தின் கீழ், 5 முதல் 10 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புத்தொகைகள் கூடுதலாக 1% வட்டியை வழங்குகின்றன. இதன் விளைவாக 7.50% கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடந்த 5 ஆண்டுகளில் 33% ரிட்டன்.. டாப் 5 வேல்யூ ஃபண்டுகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com